Saturday, January 19, 2008

413. அந்தோணிக்கு உதவி வேண்டி

அன்பு நண்பர்களே,

சமூக உதவி சார்ந்த விதயங்களில் மிகுந்த அக்கறை உடைய சிங்கை அன்பு அந்தோணி என்ற இளைஞருக்கு உதவுவது குறித்து அனுப்பிய மின்மடலில், ஏற்கனவே மதுமிதா தனது நட்சத்திர வாரத்தில் எழுதிய பதிவின் சுட்டியை அளித்து, அந்தோணிக்கு நாம் கூட்டாகச் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் முன் வைத்தார்.
**************************
From Madhumithaa's posting:
இசைதான் வாழ்க்கை என்று இசையைக் கற்ற அக்குழந்தை பாதியில் படிப்பை நிறுத்திய சோகத்திற்கு காரணம், வாழ்ந்தே ஆகவேண்டுமே என்ற தீராவிருப்பே.

பி.ஏ இசை இரண்டாம் வருடம் முடித்துவிட்டு மூன்றாம் வருடம் செல்ல இயலவில்லை.மூன்று வருட திரையிசை முயற்சிக்குப் பிறகு இசையை விட்டு விட்டு, கணினியில் ஏதேனும் வேலை செய்ய வேண்டும். யாரையும் சார்ந்திருக்காது தன் உழைப்பில் வாழ வேண்டும் என்பது இவரின் விருப்பம்.

இதில் என்ன விஷயம் இருக்கிறதென்று பார்க்கிறீர்களா?இதுதான் விஷயமே. மனம் தளராத ஊக்கம் குறையாத இக்குழந்தை வசிப்பது ரெட்ஹில்ஸில்.

அப்போது அக்குழந்தைக்கு வயது 11. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தவறி ஒரு கிணற்றில் விழ நேர்ந்த விபத்தில், கழுத்துக்குக் கீழே எந்த உணர்வும் இல்லை. குழந்தையைப் பார்ப்பது போன்றே இவரைக் கவனிக்க வேண்டும். கைகள் மட்டும் உணர்வுடன் செயல்படும். கைகளும் மூளையும் போதும் என்கிறார் தான் உழைப்பதற்கு.

பரிதாபத்தையோ, அனுதாபத்தையோ இவர் எதிர்பார்க்கவில்லை. அன்பையும் நட்பையும் போற்றும் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்புக் குழந்தை. உழைப்பின் மதிப்பறிந்த இக்குழந்தையை வாழ்த்துவோம். உரியதை அளிப்போம்.
********************************************

இம்முயற்சிக்கு அன்பு தன் பங்காக ரூ 10000 அனுப்பியும் உள்ளார். அவர் தந்த ஊக்கமும், எனது முந்தைய சமூக உதவி முயற்சிகளுக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவும் தான், இந்த பதிவின் வாயிலாக இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கத் தூண்டுதலாக அமைந்தது.

புதிய பதிவர்களுக்கு ஒரு தகவல்: இது வரை கௌசல்யா என்ற ஏழை மருத்துவ மாணவியின் படிப்புக்கும், இன்னும் சில கல்வி சார்ந்த விதயங்களுக்கும் உங்கள் ஆதரவோடு, உதவி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், நான்கு பெண் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கும், அலெக்ஸாண்டர் என்ற ஆதரவற்ற முதியவரின் கண் மருத்துவ சிகிச்சைக்கும் நீங்கள் செய்த பொருளுதவியின் வாயிலாக, அக்குழந்தைகளும், முதியவரும் குணமடைந்து நலமாக உள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட விழைகிறேன்.

பார்க்க: நண்பர்களுடன் சமூக சேவை

********************************
அந்தோணி தன்னைப் பற்றி:

பல முறை இந்த வாழ்க்கை என்னை சந்தோஷப் படுத்தியிருக்கிறது.
அதற்குச் சமமாக துக்கப்படுத்தியும் இருக்கிறது. (நாணயத்தின் இரு பக்கங்கள்...?)

ஒரு உண்மயை இங்கே விளம்பியாகவேண்டியது கட்டாயம்.

என்னதான் Positive Anthony என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும்... துயரமும் துன்பமும் என்னை வாட்டும்போது பலமுறை (எண்ணிக்கை நினைவில்லை) நானும், தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன்.

கொடூரமான மனவேதனைகளை அனுபவித்திருக்கிறேன்.
மனதின் வலி தாங்காமல்....
இரவுகளில் வெடித்து அழுதிருக்கிறேன்.

"இறைவா! இந்த நொடியே என்னை எடுத்துக்கொள்," என்று
புழுவாய்த் துடித்துக் கெஞ்சியிருக்கிறேன்.

என் தந்தை அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார்.

"சின்னதொரே...! ராஜா...!," "நாங்க (பெற்றோர்) இருக்கும்போதே கடவுள் உன்னை எடுத்துக்கணும்னு வேண்டிக்கடா...!"

அவர் சொல்வது எந்த அளவு சத்தியம், நிதர்சனம், என்பதை அவர் இருக்கும்போதே எனக்கு வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது.

ஊனமுற்ற தன் மகனுக்கு, உணவிடுவதைத் தவிர, உடலளவிலோ, வேறு வசதிகளோ... எதுவுமே செய்ய இயலாத ஒரு வயதான தகப்பனாக...
அவர்...

தான் அழுவதைக்கூட மறைக்கப் பார்ப்பார். (வேறு பக்கம் திரும்பிக் கொள்வார். உடல் குலுங்கும். கண்களில் மெளனமாய் வான் மழை வழிந்தோடும்.)

28-6-2007 விதி என் வாழ்வின் சூரியனை விழுங்கிய நாள்.

என் தந்தை இறைவனடி சேர்ந்தார்.

இன்னமும் அந்த அதிர்ச்சியில்... இழப்பில்... இருந்து என்னால் வெளிவர முடியவில்லை.

என்னடா இவன் Positive Anthony என்று பெயர் வைத்துக் கொண்டு,
இப்படி அநியாயத்துக்கு அழுதுத் தொலைக்கிறானே, என்று நீங்கள் நினைக்கலாம்.

இல்லை!

நான் என்ன தெய்வப் பிறவியா?

எதற்கும் அசைய மாட்டேன் என்று சொல்வதற்கு.

"சாத்வீகனன்றோ நான்?,
சொல்லடி என் சக்தி...?"
என்றுக் கதறத் தோன்றுகிறது.

எத்தனை துன்பங்களைச் சந்தித்திருந்தாலும்....
இப்போது...
நான் மிக, மிக சந்தோஷமாக இருக்கிறேன்.

இயற்கை என்னும் அந்த மகா சக்தி (கடவுள்), ஒரு கதவை மூடினால், மற்றொரு கதவைத் தயாராகத் திறந்து வைத்திருக்குமாம்.

ஆம். இது நிஜம்.

என் கழுத்துக்கு கீழ் முடக்கப்பட்ட சக்தி முழுவதும்...
என் தலையில்(மூளையில்)...,
கைகளில் மாற்றப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

*****************************************

தனது வாழ்க்கையை நம்பிக்கையுடனும், தெம்புடனும் எதிர்கொண்டிருக்கும் அந்தோணிக்கு தற்போது மிகவும் அவசியமானவை, ஒரு நல்ல மெத்தையும், ஒரு மடிக்கணினியும், ஒரு சக்கர நாற்காலியும். நாம் கூட்டாகச் செய்யும் பொருளுதவி மூலம், இம்மூன்றையும் அவருக்கு வாங்கித் தர முடியுமானால், அவருக்கு அது பெரிய உதவியாக அமையும்.

அந்தோணிக்கு உதவ விரும்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் அளித்தால், பணம் அனுப்புவதற்குத் தேவையான வங்கி விவரங்களை அனுப்புகிறேன். எனது மின்னஞ்சல்: balaji_ammu@yahoo.com
முந்தைய உதவி முயற்சிகளில் பங்கேற்ற நண்பர்கள் வசம், எனது வங்கிக் கணக்கு விவரங்கள் இருக்கும்.

அந்தோணிக்கு நேரடியாக உதவ விரும்பினால், அவரது வலைப்பதிவில் அவரைப் பற்றிய தகவல்களும், தேவையான விவரங்களும் உள்ளன. சில விவரங்களை கீழ்க் காணவும்.

Address:
S. Anthony Muthu,
C/o J. Dharmaraj, 5/96 Cheran street, K.K.Nagar, Pammadhukullam, Redhills, Chennai-52, Tamilnadu, India
Pin Code No: 600052

Tele: 26323185,
Mobile No: 09444496600,
E.mails:
anthonymuthu1983@yahoo.com
anthonymuthu1983@gmail.com

J. Dharmaraj
Indian bank/ Chennai/ Redhills Branch.
Old Account No.32318
New Account No. 46929660-7


இம்முயற்சிக்கு உங்களால் இயன்ற ஆதரவு தருமாறு பணிவான வேண்டுகோளுடன்

எ.அ.பாலா

37 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

அன்பு said...

மிக்க நன்றி பாலா. உங்கள் பல பணிகளுக்கிடையிலும், இதுபோன்ற தொடர் முன்னெடுப்புகளுக்கு பாராட்டுக்கள்.

சகோதரர் அந்தோணிக்கு, அவரும், அவர்தம் குடும்பத்தாரும் படும் துயரில் பங்கெடுக்க முடியாவிட்டாலும், நம்மால் இயன்ற பொருளுதவியைவாது நல்கி அவர்கள் சிரமம் குறைப்போம். நமது ஆசிகளும், பிரார்த்தனைகளும்.

Aruna said...

பாலா பிடியுங்கள் பூங்கொத்தை......
இது போன்ற மனித நேயங்கள் உயிரோடு இருப்பதால்தான் இறைவனை உணர முடிகிறது...உங்கள் பணி தடங்கலின்றித் தொடர வாழ்த்துக்கள்!
அன்புடன் அருணா

said...

Thanks for ur information

Regards

N Suresh said...

மிக்க நன்றி பாலா!

பாசமுடன்
என் சுரேஷ்

enRenRum-anbudan.BALA said...

அன்பு, அருணா, விஜி, சுரேஷ்,

ஊக்கத்திற்கு நன்றி. நம்மால் இயன்றதைச் செய்வோம். அந்தோணி பற்றி ஏற்கனவே, மதுமிதாவும், சுரேஷும் பதிவிட்டிருந்தார்கள்.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

பின்னூட்டக் கயமை 1 !

enRenRum-anbudan.BALA said...

பின்னூட்டக் கயமை 2 !

said...

பின்னூட்டக் கயமை 3 !

Anbu(parasparfund@gmail.com) said...

தம்பி அந்தோணிக்கு மிக அத்தியாவாசிய தேவைகள் ஒரு நல்ல படுக்கையும், சக்கர நாற்காலியும்.

ஆனாலும், அவர் இத்துணை சிரமத்துக்கிடையிலும் தன்னை வெகுவாக கவனித்து வரும் சகோதரிக்கும், குடும்பத்துக்கும் ஒரு பொருளாதார ஆதாராமாக தான் ஏதாவது செய்யவேண்டும் என்ற முயற்சியில்தான், கணிணி மூலம் எதாவது தொடர்வருமானம் வருமாறு எதாவது ஒரு பணி கிட்டுமா என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்.

அதனால் நண்பர்கள், பொருளாதர உதவியோடுமட்டுமல்லாமல், இது தொடர்பான ஆலோசனைகள், வழிமுறைகளும் அளிக்குமாறு அவரின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அத்தோடு, மேசைக்கணிணி பயன்படுத்த மிகுந்த சிரமேற்கோள்வதால்தான், அவரின் தேவை மடிக்கணிணியாக இருக்கிறது. அதை நியாயமான விலைக்குப் பெற மாற்றுயோசனையும் (தெரிந்த நிறுவனங்கள் மூலம் புதியதோ அல்லது தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட மடிக்கணிணிகள் போன்றவை) வரவேற்கப்படுகிறது.

இதுவரை பின்னூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. வழக்கம்போல் இப்பணியை வழிநடத்தும் பாலாவுக்கும், நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.

அந்தோணியை நமக்கு அறிமுகப்படுத்திய, அவருக்கு மிகுந்த ஆதரவாய் இருந்துவரும் கவிஞர் சுரேஷ் மற்றும் அழகி விஷிக்கும் மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

ramachandranusha(உஷா) said...

test :-)

தகடூர் கோபி(Gopi) said...

பாலா,

சில பெரிய தன்னார்வத் தொண்டு இயக்கங்கள்/நற்பணி மன்றங்கள் மட்டுமே செய்யும் இது போன்ற பணிகளை நீங்கள் சில நண்பர்களோடு செய்து வருவது பாராட்டுக்குறியது.

enRenRum-anbudan.BALA said...

கோபி, Usha,
மிக்க நன்றி

said...

பின்னூட்டக் கயமை 4 !

சாம் தாத்தா said...

அன்புள்ள பாலா,

'அந்தோணிமுத்து'
வுக்கான உங்களின் அன்புக்கரம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

அவனது இடத்தில் நான் இருந்தால் எப்படி சந்தோஷப் படுவேனோ அப்படி ஒரு சந்தோஷம் மனம் முழுக்க.

இறைவன் உங்களை முழுமையாக ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன்.

என்னுடைய வலைப்பூவில்,
உங்கள் அனைவருக்கும்,
நன்றி சொல்லி இருக்கிறேன்.

கிரிக்கெட் எனக்கும் மிகப் பிடிக்கும்.

Unknown said...

நன்றி நண்பரே

உங்கள் மூலமாக அந்தோனிமுத்துக்கு
என் கடமையைச் செய்ய விரும்புகிறென் பாலா
என் உதவி சிறிதுளி
தோழர்களோடு சேர்ந்தால்
நல்லுதவியாய் அமையும் என்ற எதிர்பார்ப்பில்

டெரன்ஸ்

உங்கள் வங்கி விபரம் தேவை

ச.சங்கர் said...

ஸின்ன இடை வெளிக்குப் பின் மீண்டும் பாலா :) ஒரு நல்ல சமூகப் பணியோடு.

வாழ்த்துக்கள் பாலா, அன்பு மற்றும் அனைத்து உதவும் நண்பர்களுக்கும்

COUNT ME IN :)

enRenRum-anbudan.BALA said...

Terrance,

தங்களின் மின்னஞ்சல் முகவரி தேவை.

என் முகவரி: balaji_ammu@yahoo.com

சங்கர்,
மிக்க நன்றி.

எ.அ.பாலா

வேந்தன் said...

//ஸின்ன இடை வெளிக்குப் பின் மீண்டும் பாலா :) ஒரு நல்ல சமூகப் பணியோடு.

வாழ்த்துக்கள் பாலா, அன்பு மற்றும் அனைத்து உதவும் நண்பர்களுக்கும்//

MEE TOO...

enRenRum-anbudan.BALA said...

சாம் தாத்தா,
தங்கள் ஆசீர்வாதங்களுக்கு மிக்க நன்றி.

வேந்தன்,
உங்கள் மடலுக்கு பதில் அனுப்பியுள்ளேன். மிக்க நன்றி.

எ.அ.பாலா

அன்பு said...

தம்பி அந்தோணியைப் பற்றி நண்பர்கள் ஒருசேர அறிய, மேலும் பல தகவல்களை ஒருங்கிணைத்து இந்தப்பதிவைப் புதிப்புத்துள்ளீர்கள். உங்கள் தொடர்முயற்சிக்கு நன்றியும், பாராட்டுக்களும் பாலா....

SriRam said...

Bala i am from srilanka my two hands not worked after happen an accident i effected by MND (http://www.mndassociation.org/) i am also like him but i am working as a web designer so i don't have much problem i can able to earn so i would like to help him little bit if you have paypal send me i will try to help him little bit
thankyou
regards

enRenRum-anbudan.BALA said...

// mahi said...
Bala i am from srilanka my two hands not worked after happen an accident i effected by MND (http://www.mndassociation.org/) i am also like him but i am working as a web designer so i don't have much problem i can able to earn so i would like to help him little bit if you have paypal send me i will try to help him little bit
thankyou
regards
//
I do not have words to describe your generosity and kind heartedness for coming forward to help Anthony. PL. give your email ID. I will get it touch with you by mail.

enRenRum anbudan
bala

Anbu(parasparfund@gmail.com) said...

மஹி... அந்தோணியின் மனத்திடத்தை நினைத்து பிரமித்திருக்கும் வேலையில், அதனிலும் ஒருபடி மேலாய் - அதே சூழ்நிலையில் வெப் டிசைனராய் உங்கள் வாழ்வை நன்முறையில் தொடர்வது கண்டு மிகுந்த ஆதரவாய் இருக்கிறது. கண்டிப்பாக, உங்களின் இந்தத் தொடர்பே அந்தோணிக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும். மிக்க நன்றியும், வாழ்த்துதலும்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

SriRam said...

bala
my mail : maahans@gmail.com

Aruna said...

// mahi said...
Bala i am from srilanka my two hands not worked after happen an accident i effected by MND (http://www.mndassociation.org/) i am also like him but i am working as a web designer so i don't have much problem i can able to earn so i would like to help him little bit if you have paypal send me i will try to help him little bit
thankyou
regards
//
I appreciate your efforts and thoughts Mahi..You will be a great inspiration to Anthony.Keep inspiring.All the best!
anbudan aruNaa

said...

அன்பு,aruNaa நன்றி
any one need to chat me you can reach me maahans@yahoo.com (yahoo messanger)

cheena (சீனா) said...

அன்பு நண்பரே

நானும் ஒரு பதிவு இவ்வகையில் போட்டுள்ளேன். படிக்கவும்

http://blogintamil.blogspot.com/2008/01/blog-post_1562.html

கண்மணி/kanmani said...

ஆ.வி பார்த்து நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன் அந்தோணி முத்து பற்றி.
உதவியில் என் பங்களிப்பிம் இருக்கும் என்ன செய்யனும் எப்படி செய்யன்னும் என்பதை மட்டும் சொல்லுங்க.

enRenRum-anbudan.BALA said...

கண்மணி,
Thanks !

Can you pl. send a mail to balaji_ammu@yahoo.com ?

மதுமிதா said...

மனமார்ந்த நன்றி அன்பு
ஒவ்வொரு முறையும் நற்பணியை ஆரம்பிப்பதில் முதல்மையானவராக இருக்கிறீர்கள்.

நன்றி பாலா. தொடரட்டும் உங்கள் பணி. சங்கரிடமும் தெரிவியுங்க‌ள்.

மதுமிதா said...

Heartiest wishes Mahi

Kumar K.P said...

Thanks for your initiative as well i wish to help Mr.Positive Anthony directly or thro you and your team.

Better we can support him as team.so kindly send your a/c details for sending money vauve of Rs.5000/-
presently i am working in Abudhabi and i will make detail mail to you soon.

Prasanth(K.P.Kumar)from Abudhabi.

Thanks to Vik

Kumar K.P said...

Wishes for this initiative.. also i read viketan.
i am really interested to support Mr.Postive anthony directly or (y)our team.

Service to our society as team is better than as a individual.

Detail mail will be sent to your mail ID.

Thanks to viketan grandfather

Prasanth from Abudhabi.

enRenRum-anbudan.BALA said...

Dear Prasanth,
Thanks for your offer to Help Anthony.

Pl. send a mail to balaji_ammu@yahoo.com and I will respond with my bank account details for money transfer.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலா
இதோ சென்னை வரும் போது அன்புக் குழந்தை அந்தோணி குறித்து நேரிடையாகவே உங்களிடம் பேசுறேன்!
மது அக்கா கிட்டயும் சொல்லி இருக்கேன்!

அது சரி, இப்பத் தான் தொலைபேசுனாப் போல இருக்கு! அதுக்குள்ளாற ஒரு வருசம் ஓடிருச்சா? :-)

enRenRum-anbudan.BALA said...

மதுமிதா, கண்ணபிரான்,

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails